Siddaarth Shanmugam

(Candidate for the position of SFBATM Convener)

சித்தார்த் சண்முகம் - அமைப்பாளர் பொறுப்பிற்காக

#RaisingTheBar #உயர்வுள்ளல்

என் பெயர் சித்தார்த். நான் கூகிள் (Google) நிறுவனத்தில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருட் பொறியாளனாகப் பணியாற்றிவருகிறேன். தன்னூக்கம் மிக்கவன்; முரண் கலைந்தும் பொதுக்கருத்திசைவு கொணர்ந்தும் தாக்கம் மிக்க, சாதனைபல படைத்த அணிகளை வளர்த்துள்ளேன். Google-இல் தமிழ் சார்ந்த பணிகளை முன்னெடுத்தும், மேலும் பலவற்றிற்கு ஆலோசனை வழங்கியும் இன்றியமையாத பங்களித்துள்ளேன். தமிழ்ப் பற்றுமிக்கவன். வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் உலகின் மாபெரும் தமிழ் அகரமுதலித் திட்டத்தின் தமிழ்ச் சொல்லாக்கத்தில் பங்களித்தும், தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியும் வருகிறேன். மேலும், சிறார் / இளைஞர் அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கியும் வருகிறேன். மேலும் என்னைப்பற்றி ...


அமைப்பாளர் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால்,

  • மக்கள் இணையத்திலும் நேரிலும் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த (Hybrid) நிகழ்வுகளே இனிவரும் காலங்களில் நடக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இவ்வாறான நிகழ்ச்சிகள் நடத்திய அனுபவமும், தொழில்நுட்பப் புரிதலும் உள்ளதால் என் பணியைச் சிறப்பாக செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

  • நம் தமிழ் மன்றத்தில் இளைஞர் பங்களிப்பை அதிகரிப்பதை எனது தலையாய நோக்கங்களில் ஒன்றாகக் கொள்வேன். இதற்கென, புலம்பெயர்ந்து படிக்க மற்றும் பணி நிமித்தமாய் வளைகுடாப் பகுதிக்கு வரும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நிகழ்வுகள் நடத்த (உதாரணமாக, மேற்படிப்பு மற்றும் பணி முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்) முனைவேன்.

  • இரண்டாம் தலைமுறையினரிடமிருந்து படைப்புகள் உருவாகும் வண்ணம் அவர்களை ஊக்குவிக்கக் குழந்தை எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான தளம் அமைத்தல் போன்ற சிறார்களுக்கான திட்டங்களை முன்னெடுப்பேன்.

  • அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் தமிழ் மன்றங்களில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்வுகளை அதிகரிக்க அவர்களோடு இணைந்து பணியாற்ற முனைவேன்.

  • மேலும், தமிழ் மொழியின், தமிழரின் பெருமையைப் பறைசாற்றும் எல்லா முயற்சிகளையும் ஆதரிக்கவும் முன்நின்று நடத்தவும் செய்வேன்.


வளைகுடாப் பகுதியில் பெரும் ஆலமரமாய் விழுதுகள் பல விட்டு அயலகம்வாழ் தமிழ்ச் சமூகத்தின் அரணாய் நிற்கும் SFBATM-இல் இணைந்து, இம்மன்றத்தின் வளர்ச்சிக்காகவும் மன்ற உறுப்பினர் நலனுக்காகவும் பணியாற்ற எனக்கோர் நல்வாய்ப்பினை நல்குமாறு வேண்டுகிறேன். நன்றி!


#RaisingTheBar

I'm Siddaarth, a Software Engineer, good consensus builder, an excellent conflict resolver, and have been tech leading and managing high impact engineering teams. I’ve been contributing and guiding various Tamil language related efforts at my workplace. I’ve been a key contributor and technical advisor for The World’s largest Tamil Lexicon Project. More about me...


If elected for the Convener post,

  • With future events moving towards a Hybrid model (in-venue + online), I'll ensure excellent logistics for in-venue, online and hybrid events through my experience in organizing them for NGOs and at my work.

  • Increasing youngsters' participation in the association through programs targeting immigrant Tamil youth (career guidance, for instance) will be one of my key focuses.

  • I’ll work towards creating a platform to enable second generation Tamil children to write and create in Tamil.

  • I’ll take steps to work with other Tamil associations in the country to increase focus on children and youth programs.

  • I'll also strongly support and drive efforts that would establish the greatness of Tamil society.


I swear to do my best for the growth of SF-BATM and the Tamil community in the bay area if given an opportunity in the upcoming election. Thank you!