Pugal Anbu
(Candidate for the position of SFBATM President)
புகழ் அன்பு - தலைவர் பொறுப்பிற்காக
வணக்கம்!
மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் என்றென்றும் உங்களுக்கு கிட்டட்டும்!
2020இல் தமிழ்மன்ற செயலாளராக பணியாற்றியபொழுது திருவள்ளுவருக்கு சிலையும், 'யாதும் ஊரே' கல்வெட்டும், ஐக்கிய நாடுகளின் பிறப்பிடமான சான்பிரான்சிஸ்கோ மாநகரில் நிறுவும்பொருட்டு, என் தலைமையில் T-SKY என்றகுழு அமைத்தேன்.
"யாவரும் கேளிர்" என்று பறைசாற்றும் நாம், அதை நடைமுறைப்படுத்த 'agree to disagree' என்ற பக்குவத்திற்கு வரவேண்டும். அதை இலக்காகவைத்து, 2020ஆம் ஆண்டு நான் நடத்திய TownHall கூட்டம், மன்ற வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். அக்கூட்டம் therapeutic-காக இருந்தது என்று அதில் பங்கெடுத்தவர்கள் கூறினார்கள்.
2021ல் கொரோனா நிவாரணநிதிக்காக $100K குறிக்கோள் என்று தமிழ்மன்றம் அறிவித்தது. ஆரம்பக்கட்டத்தில், தன்னார்வலர்களின் உதவி கிடைக்காமல் 'இலக்கை எட்ட முடியாமல் போய்விடுமோ' என்று நிர்வாககுழுவினர் மலைத்து நின்றனர். 'நான் இருக்கிறேன். இலக்கைத் தொட்டுவிடலாம்' என்று நம்பிக்கை ஊட்டி, களத்தில் இறங்கி, மற்ற தன்னார்வலர்களின் உதவியோடு, மூன்றே வாரங்களில் $100K திரட்டித் தந்தேன்.
சென்ற வருடம் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட நான், நூலிழையில் வாய்ப்பிழந்த வேலையில், தற்போது மீண்டும் போட்டியிடுவதற்குகான நோக்கம், தமிழ்மன்றத்தை #RaisingTheBar Initiatives மூலம் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டுமென்பதே!
(#1) இரண்டு அடுக்கு அமைப்பு; இரண்டு வருட பொறுப்பு!
(#2) மாபெரும் பொங்கல் திருவிழா in County Fairgrounds!
(#3) திருவள்ளுவர் சிலை & "யாதும் ஊரே" கல்வெட்டு in San Francisco, the birthplace of United Nations.
(#4) Making the Tamil Community Center (TCC) a reality!
(#5) அமெரிக்காவில் Tamils Day என்று உருவாக அடித்தளம் அமைத்தல்!
(#6) ஆண்டுதோறும் பிரம்மாண்ட விழாக்கால விருந்து!
(#7) Quarterly Town Hall Meetings.
Manifesto:
https://online.fliphtml5.com/ecro/rnlp/#p=1
YouTube:
https://youtube.com/playlist?list=PLVafWyufMmt5rOLIm9DXVYHXQeFSLA7gL
இந்த "மாபெரும் தமிழ் கனவை" நனவாக்க, எனக்கும் எனது அணியினருக்கும் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!