Gorky Kumaresan
(Candidate for the position of SFBATM Treasurer)
கார்க்கி குமரேசன் - பொருளாளர் பொறுப்பிற்காக
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் குறளும் , யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் குரலும் தமிழராகிய நமது வாழ்வியல் வழிமுறைகள்.
வணக்கம்.நான் கார்க்கி குமரேசன்.
2022 சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில்,பொருளாளர் பொறுப்பிற்கு போட்டியிடுகிறேன். பொருளாளர் என்பதை கவனமாகவே பொறுப்பு என்று குறிப்பிடுகிறேன் பதவி என்றல்ல.எனது செயல்பாடுகளின் அணுகுமுறையை இவ்வாக்கியம் உணர்த்தும்.
ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக Bayareaயாவில் வசிக்கிறேன்.10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கிறேன்.40 ஆண்டுகளாக தமிழன் என்ற உணர்வுடனும்;நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் கூறியது போல "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு" என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வருகிறேன்.
தற்போது Renewable Energy sector நிறுவனம் ஒன்றில் Financial Systemகளை நிர்வகிக்கும்,அது தொடர்பான மென்பொருட்களை உருவாக்கும் Applications Engineerராக பணியாற்றி வருகிறேன்.
தமிழ் பற்றும் தமிழருக்கு ஆற்ற விரும்பிய தொண்டும் என்னை தன்னார்வல செயல்பாடுகளை நோக்கி நகர்த்தின.கடந்த மூன்று ஆண்டுகளாக அறம் தமிழ் பள்ளியில் தன்னார்வலராக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
நண்பர்களுடன் சேர்ந்து சமூக நீதி(Social Justice),சமத்துவம்(Equity),பெண்ணுரிமை(Women Rights) போன்ற முற்போக்கு கருத்துக்களை பரப்பும் நோக்கில் புத்தகங்களை சேகரித்து நூலகங்களிற்கு அளிக்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளேன்.
எனது சுயஆர்வத்தினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் Fremont Ohlone கல்லூரியில் மாலைநேர மாணவனாக கணக்கியல்(Accounting) பயின்று சான்றிதழ் பெற்றுள்ளேன்.
அலுவலகத்தில்,தகவல் தொழில்நுட்பத்துறையில் (IT) பணியாற்றும் நான்; நாள்தோறும் உரையாடும்/உடன் பணியாற்றும் துறையினர் நிதியும்(Finance),கருவூல கணக்குத் துறையினரும்(Treasury&Accounts).
ஆகவே பணியில் கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் கணக்கியல் சார்ந்த அறிவு,பொருளாளர் பொறுப்பில் பயன்படுத்த கிடைத்த நல்வாய்ப்பாய் பார்க்கிறேன்.
SFBATMன் பொருளாளர் பொறுப்பிற்கு என்னையும் பிற நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு எங்கள் அணி வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்து,உங்களுக்கு தொண்டாற்ற வாய்ப்பு அளிக்குமாறு நெஞ்சு நிறைந்த உண்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.#RaisingTheBar
எங்கள் வாழ்வும்;எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று முழங்குவோம்!
தமிழால் இணைவோம்! தமிழராய் உணர்வு பெறுவோம்!