Balaji Kamatchi Ramakrishnan

(Candidate for the position of SFBATM Vice President - Admin)

பாலாசி காமாட்சி இராமகிருட்டிணன் - துணைத் தலைவர்-நிர்வாகம் பொறுப்பிற்காக

ஐயன் வள்ளுவனின் கூற்றுப்படி மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று எனது தேடலையும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கூற்றுப்படி இயங்கிக்கொண்டிருக்கும் எனது பெயர் பாலாசி காமாட்சி இராமகிருட்டிணன்


நடைபெறும் வளைகுடாத்தமிழ் மன்றத்தேர்தலில் துணைத்தலைவர் அதாவது Vice-President Admin பொறுப்புக்கு போட்டியிடுகிறேன்.


நான் தமிழ் மன்றத்தில் Sponsorship வசூலிப்பது மற்றும் அவர்களின் பொருட்களை சந்தைப்படுத்துதல் பணி செய்துள்ளேன், இவ்வருடம் Covid Vaccination தன்னார்வலப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன் மேலும் மௌண்டைன் ஹவுஸ், திரேசியில் பல தமிழ் விழாக்களை நடத்தியுள்ளேன், பணியாற்றியுள்ளேன்.


ஐயா கலாம் கனவு காண சொன்னதற்கிணங்கி தமிழ் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைவதற்கு இணைந்துள்ளோம் Raising the BAR அடுத்த 40 ஆண்டு கால தமிழ் மன்றத்தின் தொலைநோக்கு பார்வை என்னை ஈர்த்தது.


இந்த விரிகுடாப்பகுதி நன்கு விரிந்து அதிகமான தமிழ் மக்களை கொண்டுள்ளது ஆகையால் அவர்களை கவரும் வண்ணம் அதிகாரப் பகிர்தல் இரண்டு அடுக்கு இரண்டு வருடப் பொறுப்பு.


நான் துணைத்தலைவராக இன்னும் பல தொழில் நிறுவனங்களை அணுகி எப்படி நம் மன்றத்திற்கு நன்கொடை பெறலாம் மேலும் மற்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து (B2B) பணியாற்ற முற்படுவேன்.


புதியதாக சிலம்பம், சிலை வடித்தல், சித்த மருத்துவம், அடிப்படை அகழாய்வுப்பணி போன்ற கலைகளை அறிமுகம் செய்வதற்கு வல்லுநர்கள் ஏற்பாடு செய்யப்படும்.


வளைகுடாவிலுள்ள நூலகங்களை அணுகி தமிழ் நூல்களை அனைத்து நூலகங்கிளிலும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்படும்.


உயர் பள்ளிக்குழந்தைகளுக்கு Mental Health, Emotional support and Career Guidance மேம்படுத்துவது பற்றி துறை வல்லுநர்களின் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்படும். மேலும் பதின் பருவ குழந்தைகளின் Medical Directive பற்றி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும் படி மற்றும் அதன் வழிமுறைகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.


வளைகுடாப் பகுதியிலுள்ள அனைத்து தமிழ் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், கணக்கர்கள் மேலும் மற்ற தொழில் முனைவோர்களின் தகவல்களை நமது மன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்க ஆவண செய்யப்படும்.


நன்றி,

பாலாசி காமாட்சி இராமகிருட்டிணன்