Nithya Raghu

(Candidate for the position of SFBATM Vice President-Cultural)

நித்யா ரகு - துணைத் தலைவர்-கலாச்சாரம் பொறுப்பிற்காக

அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் நித்யா ரகு. நான் வளைகுடா பகுதியில் மென் பொறியாளராக பணியாற்றுகிறேன்.

2022 வளைகுடாப்பகுதி தமிழ்மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில், துணைத்தலைவர் கலாச்சாரம் பொறுப்பிற்கு போட்டியிடுகிறேன்.

தமிழ்ப்பற்றும் மக்களுக்கு ஆற்ற விரும்பிய தொண்டும் என்னை தன்னார்வல செயல்பாடுகளை நோக்கி நகர்த்தின. கடந்த 3 ஆண்டுகளாக அறம் தமிழ்ப்பள்ளியில் தன்னார்வலராக ஆசிரியர் பணியாற்றியுள்ளேன்.

எனது அன்னை எனக்குப் போதித்த நல் ஒழுக்கங்களையும், பண்புகளையும் சிறு குழந்தைகளுக்கு இந்த ஆசிரியர் பணி மூலம் கொண்டு சேர்த்துள்ளேன்.

நான் இந்த ஆசிரியர் பணியை செய்வதற்கு மிக முக்கியமான காரணம் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தமிழரின் மரபு நம் இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கம்.

எனது இளவயது முதலே கிராமப்பகுதியில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி மேம்பாட்டிற்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் பல முன்னெடுப்புகள் மூலம் உதவி செய்துள்ளேன்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் தன்னார்வலராக பணியாற்றியுள்ளேன் குறிப்பிடும்படியாக கோடைவிழா நிகழ்வுகளில் பதிவாளராக என்னால் முடிந்த தன்னார்வலர் தொண்டு ஆற்றி உள்ளேன்.

தமிழர்களின் பெரும் இன்னலுக்கு உள்ளான சென்னை பெரு வெள்ளத்தின் போது எனது தனிப்பட்ட முன்னெடுப்பினால் நண்பர்கள் மற்றும் சுற்றத்தவர் உதவியுடன் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நிதியை திரட்டி அம்மக்களுக்கு என்னால் இயன்ற உதவியை அளித்துள்ளேன்.

எனக்கு கிடைத்த தன்னார்வ தொண்டு அனுபவத்தை பயன்படுத்தி துணை கலாச்சாரம் பதவியில் என்னால் முடிந்த நற்பணிகளை ஆற்றுவேன் என்று உறுதி மொழி அளிக்கிறேன்.

துணை தலைவர் கலாச்சாரம் பதவிக்கு என்னையும் பிற நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு எங்கள் அணி வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு தொண்டாற்ற வாய்ப்பு அளிக்குமாறு நெஞ்சு நிறைந்த உண்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.